கன்னியாகுமரி, மலப்புரம், திருப்பதி, பெல்காம் மக்களவை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்..

கன்னியாகுமரி, மலப்புரம், திருப்பதி, பெல்காம் மக்களவை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்..

கன்னியாகுமரி, மலப்புரம், திருப்பதி,பெல்காம் மக்களவை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த மாதிரியே அமைந்து இருந்தது.
ஆந்திராவில் திருப்பதி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மடிலா குருமூர்த்தி வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த பனபாகா லட்சுமியை 2.71 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

கன்னியாகுமரி, மலப்புரம், திருப்பதி, பெல்காம் மக்களவை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்..
அங்காடி மங்கல் சுரேஷ்

கர்நாடகாவில் பெல்காம் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க.வின் அங்காடி மங்கல் சுரேஷ் வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சதீஷ் லஷ்மன்ராவ் ஜர்கிஹோலியை 5,240 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கன்னியாகுமரி, மலப்புரம், திருப்பதி, பெல்காம் மக்களவை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்..
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

கேரளாவில் மலப்புரம் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அப்துஸ்சமத் சமதானி வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வி.பி.சானுவை 1.14 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

கன்னியாகுமரி, மலப்புரம், திருப்பதி, பெல்காம் மக்களவை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்..
விஜய் வசந்த்

தமிழகத்தில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரசின் விஜய் வசந்த் அமோக வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை 1.37 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.