கன்னியாகுமரியில் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய ஆசாமிகள் இருவர் கைது!

 

கன்னியாகுமரியில் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய ஆசாமிகள் இருவர் கைது!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் வீட்டிலேயே கள்ளச்சாராயம் காய்ச்சிய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால், தமிழகத்தில் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடியது. கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் ஆயிரக் கணக்கில் கைது செய்யப்பட்டனர். லட்சக்கணக்கான லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட்டது.

கன்னியாகுமரியில் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய ஆசாமிகள் இருவர் கைது!
டாஸ்மாக் கடைகள் திறந்த நிலையில் கள்ளச்சாராயம் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் ரகசியமாக கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் குலசேகரம் அருகே உள்ள செருப்பாலூர் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது செருப்பாலூரைச் சேர்ந்த அய்யப்பன், புஷ்பானேந்திரன் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது கண்டறியப்பட்டது. அவர்கள் வீட்டில் இருந்து 10 லிட்டர் கள்ளச்சாராய ஊறலையும் ஐந்து லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.