கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்குத்தான்! – தங்கபாலு பேட்டி

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்குத்தான்! – தங்கபாலு பேட்டி

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்குத்தான்! – தங்கபாலு பேட்டி
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்குத்தான்! – தங்கபாலு பேட்டி

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எச்.வசந்தகுமார் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தார். இதனால் அந்த தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில் யார் போட்டியிடுவது என்ற பிரச்னை இரண்டு தேசிய கட்சிக்குள்ளும் எழுந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியில் எச்.வசந்தகுமாரின் மகன் மல்லுக்கட்ட, பா.ஜ.க-வில் பொன் ராதாகிருஷ்ணனுடன் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மல்லுக்கட்டி வருகின்றனர்.

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்குத்தான்! – தங்கபாலு பேட்டி

இந்த நிலையில் வ.ஊ.சிதம்பரனாரின் பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்க காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தங்கபாலு வந்தார். அப்போது நிருபர்கள் அவரிடம் பேட்டி எடுத்தனர்.
அப்போது, “எச்.வசந்தகுமார் திடீர் மறைவு மிகப்பெரிய இழப்பு. அந்த தொகுதி தற்போது இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு வெற்றிபெற்ற தொகுதி என்பதால் மீண்டும் அங்கு காங்கிரஸ் கட்சியே போட்டியிடும். வேட்பாளர் யார் என்பது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கட்சி மேலிடம் முடிவு செய்யும்.

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்குத்தான்! – தங்கபாலு பேட்டி

வரும் நவம்பரில் பீகார் சட்டமன்ற தேர்தலோடு கன்னியாகுமரி இடைத்தேர்தல் நடத்தினால் வீண் செலவும் சிரமமும் ஏற்படும். எனவே, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலோடு நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்தினால் நன்றாக இருக்கும்” என்றார்.