`வேலூரில் 134 பேர்; கன்னியாகுமரியில் 140 பேர்!’- அதிகரிக்கும் கொரோனா

 

`வேலூரில் 134 பேர்; கன்னியாகுமரியில் 140 பேர்!’- அதிகரிக்கும் கொரோனா

வேலூர் மாவட்டத்தில் 134 பேருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 140 பேருக்கும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

`வேலூரில் 134 பேர்; கன்னியாகுமரியில் 140 பேர்!’- அதிகரிக்கும் கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 1,30,261 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 82,324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,829 ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னைதான் முதலிடத்தில் இருக்கிறது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 74,969 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,210 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 408 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

`வேலூரில் 134 பேர்; கன்னியாகுமரியில் 140 பேர்!’- அதிகரிக்கும் கொரோனா

வேலூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 134 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,620 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 982 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு மாவட்டங்களிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.