கன்னியாகுமரியில் மேலும் 151 பேருக்கு கொரோனா உறுதி; வேலூரில் இதுவரை 6,400 பேர் பாதிப்பு!

 

கன்னியாகுமரியில் மேலும் 151 பேருக்கு கொரோனா உறுதி; வேலூரில் இதுவரை 6,400 பேர் பாதிப்பு!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 5,875 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,57,613 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டுமே ஒரு லட்சத்து 1951 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால், வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விழுப்புரம், மதுரை, தேனி, நெல்லை, புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தான் கொரோனா வேகமெடுத்து வருகிறது.

கன்னியாகுமரியில் மேலும் 151 பேருக்கு கொரோனா உறுதி; வேலூரில் இதுவரை 6,400 பேர் பாதிப்பு!

இந்த நிலையில் வேலூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் மேலும் 171 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 6,400 ஆக அதிகரித்துள்ளது. அம்மாவட்டத்தில் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 5,378 பேர் குணமடைந்துள்ளனர். அதே போல கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 151 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 5,302 ஆக அதிகரித்துள்ளது. அங்கு இதுவரை 60 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் 3,454 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.