தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,864 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,39,,978 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,838 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 98,767பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரியில் மேலும் 200 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 4,801 ஆக அதிகரித்துள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்குகிறது. அதேபோல் புதுக்கோட்டையில் மேலும் 110 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2,164 ஆக அதிகரித்துள்ளது.