கடத்தப்பட்ட லேப் டெக்னீசியன் -பணத்தை கொடுத்த குடும்பத்தினர் -பிணத்தை கூட கண்டுபிடிக்க முடியாத போலீஸ் – தற்கொலை மிரட்டல் விடுத்துள்ள தந்தை .

கடத்தப்பட்ட லேப் டெக்னீசியன் -பணத்தை கொடுத்த குடும்பத்தினர் -பிணத்தை  கூட கண்டுபிடிக்க முடியாத போலீஸ் – தற்கொலை மிரட்டல் விடுத்துள்ள தந்தை .

உ.பி. மாநிலம் கான்பூரில் ஜூன் மாதம் 22ம் தேதி ஒரு லேப் டெக்னீசியன் சஞ்ஜீத் கடத்தப்பட்டு 30 லட்சம் கொடுத்தால் அவரை உயிரோடு விடுவதாக கடத்தல்காரர்கள் மிரட்டல் விடுத்தனர் .உடனே அவரின் தந்தை சமண் சிங் 30 லட்ச ரூபாயினை தங்களின் நகைகளை விற்று ஏற்பாடு செய்து கொண்டு கடத்தல்காரர்கள் சொன்ன இடத்திற்கு போனார் .அப்போது போலீசார் ஒளிந்திருந்து கடத்தல்காரர்களை பிடிக்க திட்டமிட்டிருந்தனர் .சமன் சிங் பணத்தின் பையை ஆற்றின் பாலத்தின் மேலிருந்து வீசியதும் கடத்தல்காரர்கள் போலீசை ஏமாற்றிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர் .

கடத்தப்பட்ட லேப் டெக்னீசியன் -பணத்தை கொடுத்த குடும்பத்தினர் -பிணத்தை  கூட கண்டுபிடிக்க முடியாத போலீஸ் – தற்கொலை மிரட்டல் விடுத்துள்ள தந்தை .

அப்போது ஒளிந்திருந்த போலீசாரால் அவர்களை பிடிக்க முடியவில்லை .இதற்கு பிறகு அந்த கடத்தல் காரர்கள் அவரின் மகனை ஜூன் 26 அன்று கொலை செய்து விட்டு ஒரு ஆற்றில் பிணத்தை வீசிவிட்டு சென்று விட்டனர் ,இதனால் அவரின் குடும்பத்தினர் ,இப்படி பணத்தையும் வாங்கிக்கொண்டு மகனையும் கொன்று விட்டார்களே என்று மன வேதனையடைந்தனர் .இந்நிலையில் அந்த கடத்தல் கூட்டத்தை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர் .அவர் கொடுத்த தகவல்படி லேப் டெக்னீஷியனை கொலை செய்த இடத்திற்கு சென்ற போலீசார் அங்கிருந்து அவரின் பைக்கை மட்டுமே மீட்டனர் .ஆனால் அவரின் பிணம் இன்னும் கிடைக்கவில்லை .

கடத்தப்பட்ட லேப் டெக்னீசியன் -பணத்தை கொடுத்த குடும்பத்தினர் -பிணத்தை  கூட கண்டுபிடிக்க முடியாத போலீஸ் – தற்கொலை மிரட்டல் விடுத்துள்ள தந்தை .
இதனால் அவரின் தந்தை சமன்சிங் ,தன் மகனின் உடலை இன்னும் போலீசார் கண்டு பிடிக்கவில்லை ,அவரின் பைக்கினை மட்டுமே கண்டுபிடித்துள்ளார்கள் என்றும் ,மேலும் அவரின் வங்கி அட்டைகள் ,பர்ஸ் போன்றவை கூட கிடைக்கவில்லை என்றும் ,தனது மகனின் உடலை போலீசார் கண்டுபிடிக்கவில்லையென்றால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வோம் என்றும் மிரட்டியுள்ளனர் .இந்நிலையில் போலீசார் அவரின் உடலை தீவிரமாக தேடி வருகிறார்கள் .