“சொப்னா வழியே சிறந்த வழி” -என தங்க கடத்தலின் சொர்க்கபூமியாக மாறிய கேரளா -தொடரும் பல கடத்தல்கள்..

“சொப்னா வழியே சிறந்த வழி”  -என தங்க கடத்தலின் சொர்க்கபூமியாக மாறிய கேரளா -தொடரும்  பல கடத்தல்கள்..

கேரளா மாநிலம் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள தங்க ஊழல் பற்றிய விசாரணை தீவிரமாக நடந்து வரும் வேளையில் , சொப்னா வழியில், மற்றொரு தங்க ஊழல் வெளிவந்தது பரபரப்புக்குள்ளாகியுள்ளது.

“சொப்னா வழியே சிறந்த வழி”  -என தங்க கடத்தலின் சொர்க்கபூமியாக மாறிய கேரளா -தொடரும்  பல கடத்தல்கள்..

கேரளா மாநிலத்தில் துபாயில் இருந்து வந்த இரண்டு பயணிகளிடமிருந்து மெர்குரி பூச்சுடன் சிறு சிறு துண்டுகளாக பைகளில் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்பட்ட 932 கிராம் தங்கம் பிடிபட்டது .
அந்த இரு பயணிகளும் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் விசாரணை நடந்து வருகிறது. இது கேரளாவில் இரண்டு நாட்களுக்குள் நடந்த மூன்றாவது தங்க கடத்தல் ஆகும் ., திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட இந்த தங்கத்தின் தோராயமான மதிப்பு ரூ .53 லட்சம்.

கேரளாவில் கடத்தல் வழக்குகள் குறித்து மூன்று புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தியபோது இந்த மூன்று சம்பவங்களும் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் பதட்டமான இந்த சூழ்நிலையில் அதிகாரிகளால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன, ஏனெனில் வந்தே பாரத் விமானங்கள் வழியாக கடத்தல் மேற்கொள்ளப்படுகிறது என்று தகவல்கள் வந்துள்ளன
இந்த கொரானா வைரஸ் பரவி வரும் இந்த நேரத்தில் கேரளாவின் பல்வேறு விமான நிலையங்களில் சுமார் 20-30 தங்கக் கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .

“சொப்னா வழியே சிறந்த வழி”  -என தங்க கடத்தலின் சொர்க்கபூமியாக மாறிய கேரளா -தொடரும்  பல கடத்தல்கள்..