பனியனை மாற்றி காரை தட்டி சென்ற மாடுபிடி வீரர் : விசாரணையில் அம்பலம்!

 

பனியனை மாற்றி காரை தட்டி சென்ற மாடுபிடி வீரர் : விசாரணையில் அம்பலம்!

மருத்துவ பரிசோதனை செய்யாத கண்ணன் அனைத்து சுற்றிலும் பங்கேற்று 12 மாடுகளை பிடித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பனியனை மாற்றி காரை தட்டி சென்ற மாடுபிடி வீரர் : விசாரணையில் அம்பலம்!

கடந்த 16ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் பங்கேற்று 12 காளைகளை அடக்கி காரை பரிசாக வென்றவர் கண்ணன். இரண்டாமிடத்தை கருப்பண்ணன் என்பவர் பெற்றார். இந்த சூழலில் இரண்டாம் பரிசு பெற்ற கருப்பண்ணன் மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் 33 ஆம் எண்ணில் ஹரிகிருஷ்ணன் என்பவர் பங்கேற்று 7 காளைகளை பிடித்தார். மூன்றாம் சுற்றில் அவருக்கு காயம் ஏற்பட்டது . இதனால் அவர் வெளியேறினார். அப்போது அவரது பனியனை கண்ணன் என்பவர் போட்டுவந்து 5 காளைகளை பிடித்தார். இதனால் அவருக்கு 12 காளைகள் பிடித்ததாக கூறி முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இது ஆள்மாறாட்டம். எனவே அவருக்கு முதல் பரிசு வழங்க கூடாது. நான் தான் அதிக காளைகளை பிடித்துள்ளேன். அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

பனியனை மாற்றி காரை தட்டி சென்ற மாடுபிடி வீரர் : விசாரணையில் அம்பலம்!

இந்நிலையில் மாடுபிடி வீரராக முறையாக பதியாமல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கண்ணன் 12 மாடுகளை பிடித்துள்ளார் என மதுரை வருவாய் கோட்டாசிரியர் முருகானந்தம் ஆட்சியருக்கு அனுப்பிய விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த அறிக்கையில், மருத்துவ பரிசோதனை செய்யாத கண்ணன் அனைத்து சுற்றிலும் பங்கேற்று 12 மாடுகளை பிடித்துள்ளார். மாடுகளை அழைத்து வரும் வாடிவாசல் வழியாக வந்து ஆள்மாறாட்டம் செய்து விளையாடியுள்ளார் கண்ணன். ஹரி கிருஷ்ணனின் 33வது எண் கொண்ட பனியனை போட்டுக்கொண்டு கண்டுபிடித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதல் பரிசாகத் தருவது பற்றி ஜல்லிக்கட்டு நிர்வாக கமிட்டி பரிசீலித்து முடிவெடுக்க அறிவுறுத்தியுள்ளேன் என்றும் மாவட்ட நிர்வாகம், விழா கமிட்டி எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவதாக கண்ணன், ஹரிகிருஷ்ணன் இருவரும் கூறியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.