படித்தது எட்டாம் வகுப்பு… பாட்டால் எட்டுத் திசைகளையும் ஆண்ட கண்ணதாசன் #Kannadasan

 

படித்தது எட்டாம் வகுப்பு… பாட்டால் எட்டுத் திசைகளையும் ஆண்ட கண்ணதாசன் #Kannadasan

தமிழ் சினிமாவில் நிலைத்த இடங்களைப் பிடிப்பவர்கள் கதாநாயகர்கள் மட்டுமல்ல. பாடலாசிரியர்களும்தான். இன்னும் சொன்னால் காலம் கடந்தும் ரசிகர்களைக் கட்டிப்போடுவதில் நிகரற்றவற்றவர்கள் பாடலாசிரியர்கள். அதுவரை திரையிசை பாடல்களில் இருந்த கடினத் தன்மையை விலக்கி, மாபெரும் தத்துவ வரிகளைக்கூட எளிமையாக்கி அதேநேரம் மலினப்ப்டுத்தி விடாமல் வரிகளை எழுதியவர் கவியரசு கண்ணதாசன். அவரின் 93-ம் பிறந்த நாள் இன்று.

படித்தது எட்டாம் வகுப்பு… பாட்டால் எட்டுத் திசைகளையும் ஆண்ட கண்ணதாசன் #Kannadasan

1927 -ம் ஆண்டுக் காரைக்குடியில் பிறந்தவர் கண்ணதாசன் என்பது பலரும் அறிந்த செய்தி. ஆனால்,கண்ணதாசனின் தமிழ்ப் புலமையால் கட்டுண்டவர்கள் அவர் படித்தது எட்டாம் வகுப்பு வரையே என்று தெரியும்போது வியந்துவிடுவார்கள். இயற்பெயர் முத்தையா. சிறுவயது முதலே கவிதை எழுதும் ஆர்வமும் ஆற்றலும் கொண்டவர். அதற்காக அவர் வைத்துக்கொண்ட பெயரே கண்ணதாசன். பின்னாளின் தமிழ் உலகமே அப்பெயரை பொன் எழுத்துகளால் பொறித்துக்கொண்டது.

படித்தது எட்டாம் வகுப்பு… பாட்டால் எட்டுத் திசைகளையும் ஆண்ட கண்ணதாசன் #Kannadasan

பிழைப்புத் தேடி புதுக்கோட்டையில் ஒரு பத்திரிகையில் சேர்ந்தார். அப்பத்திரிகை நிறுத்தப்பட்டதும் சென்னையில் சினிமா வாய்ப்புத் தேடினார். இடைப்பட்ட காலத்தில் சிறுகதை, கவிதை என ஏராளம் எழுதினார். சினிமா வாய்ப்புகளும் கிடைத்தன. 1956 ஆம் அண்டு கண்ணதாசனின் திரைக்கதை, வசனத்தில் வெளியான ‘மகாதேவி’ திரைப்படம் இவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது.

இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தியும் கண்ணதாசனும் சேர்ந்த கூட்டணி என்றால், நல்ல பாடல்களுக்குப் பஞ்சமே இருக்காது என்ற நிலை வந்தது. அந்தளவுக்கு, அச்சம் என்பது மடமையடா, காவேரி கரையிருக்கு, என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே, அன்று வந்ததும் அதே நிலா, அதோ அந்தப் பறவைபோல வாழ வேண்டும் என்று அமர்க்களமான பாடல்களைத் தந்தது இக்கூட்டணி.

சோதனை மேல் சோதனை, கடவுள் அமைத்து வைத்த மேடை, கடவுள் ஏன் கல்லானார், விழியே கதை எழுது… உள்ளிட்ட கண்ணதாசன் எழுதிய ஹிட் பாடல்களின் பட்டியல் மிக மிக நீண்டது. பாலுமகேந்திராவின் இயக்கத்தில் இளையராஜ இசையில் மூன்றாம் பிறை படத்தின் கண்ணே கலைமானே… பாடல்தான் கண்ணதாசனின் கடைசிப் பாடல்.

படித்தது எட்டாம் வகுப்பு… பாட்டால் எட்டுத் திசைகளையும் ஆண்ட கண்ணதாசன் #Kannadasan

திரையிசை மட்டுமல்ல, கண்ணதாசன் கவிதைகள் எனப் பல தொகுதிகள் வெளிவந்துள்ளன. அத்தோடு, யேசு காவியம், கிழவன் சேதுபதி, பாண்டிமா தேவி உள்ளிட்ட நூல்களையும் எழுதிக்குவித்தவர். 25-க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார். அவர் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் இன்றளவும் ஏராளமான பிரதிகள் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சேரமான் காதலி எனும் நூலுக்காகச் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.

சிவகங்கை சீமை, கருப்புப் பணம் உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரிக்கவும் செய்தார். அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தேர்தலில் போட்டியிட்டார். தமிழ்நாடு அரசி அரசவைக் கவிஞராக வலம் வந்தார்.

1981 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அமெரிக்காவுக்குச் சிகிச்சைக்கு அழைத்துசென்றனர். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காது அங்கேயே இறந்துவிட்டார். சென்னை கொண்டுவரப்பட்ட அவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான ரசிகர்க வந்தவண்ணம் இருந்தனர். ஒரு கவிஞருக்கு இத்தனை பேர் அஞ்சலி செலுத்த ஓடோடி வந்தது தமிழக வரலாற்றில் அதுவே முதன்முறை.

நெடுப்பயணம் செய்கையில் மோட்டலில் பேருந்து நிற்கையில் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளில் மூழ்கிவிட்டீர்கள் என்றாலே, அவர் இன்னும் உயிரோடிருய்க்கிறார் என்றே அர்த்தம்.