போதையின் பிடியில் திரையுலகம் -பிரபல நடிகையிடம் போலீஸ் விசாரணை

 

போதையின் பிடியில் திரையுலகம் -பிரபல நடிகையிடம் போலீஸ் விசாரணை

கன்னட திரையுலகத்தினர் சமீபத்தில் ஒரு ஹோட்டலில் நடத்திய பார்ட்டியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர்கள், நடிகர்கள் என பல பேர் போதை பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து போதைப்பொருள் போலீசார் பிரபல நடிகை ராகினியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போதையின் பிடியில் திரையுலகம் -பிரபல நடிகையிடம் போலீஸ் விசாரணை

ஹரியானாவில் உள்ள ரேவாரி நகரைச் சேர்ந்த நடிகை ராகினி பெங்களூரில் பிறந்தவர. 2009 ஆம் ஆண்டில் வீரா மடகரி திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். அதற்கு பிறகு அவர்
கெம்பே கவுடா, ராகினி ஐ.பி.எஸ், பங்காரி மற்றும் சிவா ஆகிய படங்களில் நடித்து கன்னட திரையுலகில் அவர் புகழ் பெற்றார்.
திரைப்பட தயாரிப்பாளரும் பத்திரிகையாளருமான இந்திரஜித் லங்கேஷ் கன்னட திரையுலகில் போதைப்பொருள் புழக்கம் குறித்து சி.சி.பி.க்கு தனது அறிக்கையை வழங்கியிருந்தார்.அதன் பிறகு போதைப்பொருள் போலீசார் பெங்களூருவில் அதிரடி சோதனை நடத்தி போதைப்பொருட்களை திரையுலக புள்ளிகளுக்கு வழங்கியதாக மூன்று பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர் .

போதையின் பிடியில் திரையுலகம் -பிரபல நடிகையிடம் போலீஸ் விசாரணை


இந்நிலையில் நடிகை ராகினியை போதை பொருள் போலீசார் தங்களின் அலுவலகத்துக்கு வரவைத்து விசாரிக்க சம்மன் அனுப்பியிருந்தனர் .இது பற்றி அவர் கூறுகையில் ,தன்னுடைய வக்கீல் தன் சார்பாக போதை பொருள் போலிஸில் நேரிடையாக சென்று தனக்கும் அதற்கும் தொடர்பிலில்லை என்று விளக்கம் அளித்துள்ளதாக கூறினார் .மேலும் தான் வரும் திங்கள்கிழமையன்று போலீசில் நேரிடையாக சென்று விளக்கமளிக்க இருப்பதாக கூறினார் .