இந்த உலகத்தை கொரோனாவிடமிருந்து காப்பாற்றியது விவசாயிகள்தான் – கனிமொழி

 

இந்த உலகத்தை கொரோனாவிடமிருந்து காப்பாற்றியது விவசாயிகள்தான் – கனிமொழி

இந்த உலகத்தை கொரோனாவிடமிருந்து அறிவியல் காப்பாற்ற வில்லை விவசாயிகள் தான் காப்பாற்றினார்கள் என திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியில் கெயில் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளை சந்தித்து அவர்களிடமிருந்து கோரிக்கை மனுவை பெற்றார் கனிமொழி. தொடர்ந்து விவசாயிகள் மத்தியில் பேசிய கனிமொழி எம்பி, “உயர்மின் கோபுரங்கள் அமைப்பதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது, பாரத் பெட்ரோலியம் பைப் லைன் விவசாய நிலங்கள் வழியாக அமைக்கப்படுகிறது. இதனால்
விவசாயிகள் தங்களிடமிருந்து நிலம் பறிக்கப்படும் என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் குளிரிலும் டெல்லி எரியும் அளவிற்கு வடமாநில விவசாயிகள் போராடி வருகின்றனர். அரசு அவர்களது கோரிக்கையை நிராகரித்து விட்டது. இருப்பினும் தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்த உலகத்தை கொரோனாவிடமிருந்து காப்பாற்றியது விவசாயிகள்தான் – கனிமொழி

கார்ப்பரேட் நிறுவனங்களிடம் விவசாயிகளின் வாழ்வை அடகு வைக்கும் சட்டமாக வேளாண் சட்டம் உள்ளது. விவசாயிகள் நீதிமன்றத்தை நாடமுடியாது. ஆதார விலை வழங்கப்படும் என்ற தெளிவான விளக்கம் மத்திய அரசிடம் இல்லை. அனைவரும் எதிர்த்து பேசும் நிலையில் இந்த சட்டங்களை ஆதரிப்பவர் தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

விவசாயிகள் கருத்துக்களுக்கு காது கொடுக்காத சர்வாதிகார ஆட்சி தான் அதிமுக ஆட்சி. தனது பதவியை காத்துக் கொள்ள விவசாயிகள் பிரச்சனையை புரிந்து கொள்ளாத முதல்வர் நமக்கு தேவையா? இந்த உலகத்தை கொரோனாவிடமிருந்து அறிவியல் காப்பாற்ற வில்லை. விவசாயிகள் தான் காப்பாற்றினார்கள். அவர்கள் இல்லை என்றால் கொரோனாவால் அல்ல பசியால் இறந்திருப்போம். உங்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்” எனக் கூறினார்.