நீயா..? நானா..? ‘ஈகோ’ யுத்தத்தில் கனிமொழி- உதயநிதி

 

நீயா..? நானா..? ‘ஈகோ’ யுத்தத்தில் கனிமொழி- உதயநிதி

திமுகவில் கனிமொழி-உதயநிதி இடையிலான “ஈகோ” யுத்தம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. கனி மொழி சற்று பொறுத்துப் போனாலும் உதயநிதி ஸ்டாலின் விடுவதாக இல்லை. ஏட்டிக்கு போட்டி களத்தில் குதிப்பதாக கட்சியினர் ஆதங்கப் படுகிறார்கள்.

நீயா..? நானா..? ‘ஈகோ’ யுத்தத்தில் கனிமொழி- உதயநிதி


கலைஞர் கருணாநிதியின் மகளும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்கையும்,பாராளுமன்ற உறுப்பினராகவும், திமுக மாநில மகளிர் அணிச் செயலாளராகவும் இருப்பவர் கனி மொழி. நீண்ட கால அரசியல்வாதியும் ஆவார். திமுகவில் சமீபத்தில் இளைஞரணித் தலைவராக அறிவிக்கப்பட்டவர் மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின்.

நீயா..? நானா..? ‘ஈகோ’ யுத்தத்தில் கனிமொழி- உதயநிதி


இந்த நிலையில் உதயநிதி எப்போதுமே தனது அத்தையும் திமுக எம்பியுமான கனிமொழியை போட்டியாளராகவே கருதுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கலைஞர் காலத்தில் மு.க. ஸ்டாலினுக்கு மு.க.அழகிரி போட்டியாளராக இருந்தது போல் கனிமொழிக்கு உதயநிதி போட்டியாளராக கருதப்படுகிறார்.

நீயா..? நானா..? ‘ஈகோ’ யுத்தத்தில் கனிமொழி- உதயநிதி


சாத்தான்குளம் தந்தை மகன் கொலை சம்பவத்தில் கட்சி மேலிடத்து உத்தரவுப்படி கனி மொழி தொடர்ந்து அங்கேயே முகாமிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்சி சார்பிலான நிதி உதவியை வழன்கினார். இந்த நிலையில் உதயநிதியும் அவருக்கு போட்டியாக இரவோடு இரவாக சாத்தான்குளம்,புறப்பட்டுச் சென்று ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
இதனையடுத்து நடந்த பொதுக்குழுவில் தனக்கு மகளிர் அணி பதவி தவிர கட்சிக்குள் மாநில அளவில் வேறு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்தார் கனிமொழி. ஆனால் அந்தப் பொதுக்குழுவில் கனிமொழிக்கு பேசக் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதே சமயம் உதயநிதிக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டது.

நீயா..? நானா..? ‘ஈகோ’ யுத்தத்தில் கனிமொழி- உதயநிதி


இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் ஹத்ராஸ் பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதற்கு எதிராக, போராட்டம் நடத்த கனிமொழி அனுமதி கேட்டார். இதனையறிந்த உதயநிதியும் தலைமையிடம் அனுமதி கோரியிருக்கிறார். அனால் ஸ்டாலினோ இது பெண்கள் தொடர்பான விவகாரம் ஆகவே கனிமொழி தலைமையில் போராட்டம் நடக்கட்டும் என முடிவெடுத்து சொல்லியுள்ளார். இது போல் தென் மாவட்டங்களில் கனிமொழிக்கென தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் அங்கேயும் மூக்கை நுழைத்து தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என மாவட்டச் செயலாளர்கள் புலம்புகின்றனர்.
– இர. சுபாஸ் சந்திர போஸ்