‘விரைவில்.. அதிமுக ஆட்சிக்கு முடிவு’ : ஜோதிமணி கைது குறித்து கனிமொழி ட்வீட்!

 

‘விரைவில்.. அதிமுக ஆட்சிக்கு முடிவு’ : ஜோதிமணி கைது குறித்து கனிமொழி ட்வீட்!

கரூரில் காங்கிரஸ் சார்பில் நிறுவப்பட்ட பழமையான காந்தி சிலை அகற்றப்பட்டு, தரமற்ற காந்தி சிலை புதிதாக வைக்கப்பட்டதற்கு எம்.பி ஜோதிமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதைக் கண்டித்து, இன்று காலை கரூரில் காங்கிரஸாருடன் போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தை தடுக்க முயன்ற கரூர் போலீசார், கலைந்து செல்லுமாறு காங்கிரஸ் கட்சியினரிடம் அறிவுறுத்தினர்.

‘விரைவில்.. அதிமுக ஆட்சிக்கு முடிவு’ : ஜோதிமணி கைது குறித்து கனிமொழி ட்வீட்!

ஆனால், அக்கட்சியினர் போலீசாரின் உத்தரவை ஏற்காததால் எம்.பி ஜோதிமணி உள்ளிட்டோரை குண்டுக்கட்டாக கைது செய்து போராட்டத்தை தடுத்து நிறுத்தினர். ஜோதிமணி மீதான போலீசாரின் இந்த நடவடிக்கை, காங்கிரஸ் கட்சியினரைக் கொந்தளிக்க செய்திருக்கிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து ஜோதிமணி வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், கே.எஸ்.அழகிரியும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

‘விரைவில்.. அதிமுக ஆட்சிக்கு முடிவு’ : ஜோதிமணி கைது குறித்து கனிமொழி ட்வீட்!

இந்த நிலையில், கரூரில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கரூரில் 70 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட காந்தி சிலை அகற்றியதை எதிர்த்து போராடிய காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்களையும் கரூர் மாவட்ட திமுக நிர்வாகிகளையும் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.

முதலமைச்சர் கரூர் வருவதை முன்னிட்டு ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படும் இந்த அதிமுக ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.