திறந்த வெளியில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்! மக்கள் நலனை எப்போது அரசு கருத்தில் கொள்ளும்?- கனிமொழி

 

திறந்த வெளியில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்! மக்கள் நலனை எப்போது அரசு கருத்தில் கொள்ளும்?- கனிமொழி

கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைகள், கொரோனா தனிமைப்படுத்துதல் முகாம்கள் , கொரோனா பரிசோதனைக் கூடங்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேறும் மருத்துவக் கழிவுகளின் மூலம் கொரோனா நோய் பரவும் ஆபத்து உள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையில் திறந்த வெளியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதால் கொரோனா நோய் பரவல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அப்பகுதியில் சுற்றிதிரியும் குரங்குகள் மருத்துவ கழிவுகளை குரங்குகள் எடுத்து விளையாடுவது போன்ற வீடியோ செய்திகளில் வெளியானது. இதனையடுத்து அந்த வீடியோ செய்தியை கனிமொழி தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.பி. கனிமொழி, “தமிழகத்தின் #கொரோனா சிகிச்சை மையங்களில் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பயன்படுத்தும் உடைகளும், மருத்துவக் கழிவுகளும் அலட்சியமாக கையாளப்படுகின்றன. பல பகுதிகளில் இருந்தும் இதுபோன்ற புகார்கள் அதிகம் வருகின்றன.ஒருபுறம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு விவரங்களில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருக்கும் அரசு, மறுபுறம் இப்படி அலட்சியமாக செயல்படுகிறது. மக்கள் நலனை எப்போதுதான் இந்த அரசு கருத்தில்கொள்ளும் ?” எனக் குறிப்பிட்டுள்ளார்.