பசு மாடுகளை பாதுகாக்கும் ஆர்வத்தை பெண்கள் மீது காட்டுவதில்லை- கனிமொழி

 

பசு மாடுகளை பாதுகாக்கும் ஆர்வத்தை பெண்கள் மீது காட்டுவதில்லை- கனிமொழி

உ.பி. பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு நீதி கேட்டு கனிமொழி தலைமையில், ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட திமுக திமுக மகளிரணி மெழுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்றனர், இதில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொன்முடி கீதா ஜீவன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பசு மாடுகளை பாதுகாக்கும் ஆர்வத்தை பெண்கள் மீது காட்டுவதில்லை- கனிமொழி

பேரணியில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்.பி கனிமொழி, “உ.பி.யில் பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது. பசு மாடுகளை பாதுகாக்கும் ஆர்வத்தை பெண்கள் மீது காட்டுவதில்லை. பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பின்மை அதிகரித்து வருகிறது. தளபதி இங்கு பற்ற வைக்கும் தீ நாடு முழுவதும் உள்ள குற்றங்களை எரிக்க வேண்டும். இந்தியாவில் தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் இதே மாதிரியான விஷயங்களை தான் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு செய்து கொண்டு இருக்கிறது. பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை திரும்ப திரும்ப நடக்கிறது” எனக் கூறினார்.