நீட் தேர்வால் எத்தனை மாணவர்கள் தற்கொலை? கனிமொழியின் கேள்விக்கு அரசு சொன்ன பதிலை பாருங்க!

நீட் தேர்வால் எத்தனை மாணவர்கள் தற்கொலை? கனிமொழியின் கேள்விக்கு அரசு சொன்ன பதிலை பாருங்க!

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வால் எத்தனை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என கனிமொழி எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாக நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இந்த தேர்வுகள், இந்த ஆண்டு கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தலால் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்கள் உட்பட பல தரப்பினர் கோரிக்கை விடுத்த நிலையிலும், தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்து விட்டது.

நீட் தேர்வால் எத்தனை மாணவர்கள் தற்கொலை? கனிமொழியின் கேள்விக்கு அரசு சொன்ன பதிலை பாருங்க!

அதன் படி கடந்த 1 ஆம் தேதி ஜேஇஇ தேர்வும், 13ஆம் தேதி நீட் தேர்வும் நடத்தி முடிக்கப்பட்டது. இதனிடையே கடந்த 12 ஆம் தேதி நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தமிழகத்தை சேர்ந்த 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதால், நீட் தேர்வுக்கு எதிரான குரல்கள் வலுத்தது.

நீட் தேர்வால் எத்தனை மாணவர்கள் தற்கொலை? கனிமொழியின் கேள்விக்கு அரசு சொன்ன பதிலை பாருங்க!

இந்த நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இதுவரை எத்தனை மாணவர்கள் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளால் உயிரிழந்துள்ளனர் என திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சகம், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் தற்கொலை குறித்த தகவல் ஏதும் இல்லை என எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளது.