பூ ஒன்று புயலானது – ஸ்டாலினுக்கு எதிராக கனிமொழி அமைதி புரட்சி

 

பூ ஒன்று புயலானது – ஸ்டாலினுக்கு எதிராக கனிமொழி அமைதி புரட்சி

‘பூ ஒன்று புயலானது’. இது பழைய தெலுங்கு டப்பிங் பட டைட்டில் மட்டுமல்ல. திமுகவின் இன்றைய நிலையும் இதுதான். ‘’பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. எவ்வளவு காலத்திற்குத்தான் அடங்கிக் கிடப்பது?’’ என பொங்குகிறார்கள் கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழியின் ஆதரவாளர்கள்.

பூ ஒன்று புயலானது – ஸ்டாலினுக்கு எதிராக கனிமொழி அமைதி புரட்சி


கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு கட்சியை முழுமையாக தனதாக்கிக் கொண்ட மு.க ஸ்டாலின், தனது குடும்பத்தினரை தவிர வேறு யாரும் முன்னிலைப் பெற்றுவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார். இதனால்தான் எவ்வளவோ முயற்சித்தும் அழகிரியால் மீண்டும் திமுகவில் இணைய முடியவில்லை. அதேநேரம் ஸ்டாலின் தனது மகன் உதயநிதியை ஒரே நாளில் இளைஞரணி செயலாளராக்கி தொடர்ச்சியாக அவரை புரமோட் செய்யும் வேலையை செய்து வருகிறார்.

பூ ஒன்று புயலானது – ஸ்டாலினுக்கு எதிராக கனிமொழி அமைதி புரட்சி

கனிமொழியை பொறுத்தவரை பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் என்கிற பாலிசியைத்தான் ஸ்டாலின் கடைபிடித்து வருகிறார். ஆனால் கனிமொழிக்கு கட்சி அமைப்பில் வலுவான பதவி ஒன்றில் அமர வேண்டும் என்கிற ஆசை நீண்ட காலமாகவே உண்டு. மகளிரணி செயலாளர் என்கிற உப்புசப்பில்லாத பதவியில் அவர் வேண்டா வெறுப்பாகவே தொடர்கிறார். அண்மையில் திமுகவில் போடப்பட்ட புதிய நிர்வாகிகள் நியமனத்தில் துணைப் பொதுச் செயலாளர் பதவி கிடைக்கும் என ரொம்பவே எதிர்பார்த்தார் கனிமொழி. இதற்காக பல்வேறு வழிகளில் அவர் முயற்சியும் மேற்கொண்டார். ஆனால் கனிமொழியின் ஆசை, நிராசையாகிவிட்டது.

பூ ஒன்று புயலானது – ஸ்டாலினுக்கு எதிராக கனிமொழி அமைதி புரட்சி

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கனிமொழி அந்த தொகுதி மட்டுமின்றி பரவலாகவே தென் மாவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். கனிமொழியின் நாடார் சமூக பின்புலம் இதற்கு பிளஸ் பாயிண்டாக இருந்து வருகிறது. இத்தகைய பின்னணியில் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவி மீதும் அவருக்கு ஒரு கண் உண்டு. அதிலும் சோதனையாக இப்போது அந்த பொறுப்பில் எ.வ வேலுவை அமர்த்த ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான செய்தியறிந்து கோபத்தின் உச்சிக்கே போய்விட்டாராம் கனிமொழி. ‘’ அப்பா இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா? என்னை அவமானப் படுத்துவதற்கும் ஒரு அளவில்லையா?’’ என நெருங்கிய வட்டாரங்களில் கொந்தளித்திருக்கிறார்.

பூ ஒன்று புயலானது – ஸ்டாலினுக்கு எதிராக கனிமொழி அமைதி புரட்சி


இனியும் பொறுமை காப்பதில் அர்த்தமில்லை என்கிற முடிவோடுதான் அண்மையில் அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டத்தை அடியோடு புறக்கணித்துள்ளார். இத்தனைக்கும் குழுவின் தலைவர் டி.ஆர் பாலு தொலைபேசியில் அழைத்தும் கனிமொழி தனது நிலைப்பாட்டில் உறுதியோடு இருந்திருக்கிறார். அதுபோலவே சமீபத்தில் நடைபெற்ற திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை. நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் என்கிற நொண்டி சாக்கை சொல்லி அவர் இந்த கூட்டத்தை புறக்கணித்தார். இதனிடையே ஸ்டாலினுக்கு எதிராக அமைதிப் புரட்சி செய்ய ஆரம்பித்திருக்கும் கனிமொழியை அழகிரி அடிக்கடி தொடர்புகொண்டு ஆலோசனை வழங்கி வருவதாகத் தகவல்.