‘உட்சபட்ச தண்டனை கொடுக்க வேண்டும்’ சிறுமி கொலை குறித்து கனிமொழி

 

‘உட்சபட்ச தண்டனை கொடுக்க வேண்டும்’ சிறுமி கொலை குறித்து கனிமொழி

சாத்தான் குளம் அருகே உள்ளது கல்வலை கிராமம். இந்தக் கிராமத்திலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஓடைப் பகுதியில் 7 வயதுள்ள ஒரு சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத சிலர் ஒரு டிரம்மில் சிறுமியைத் தூக்கி வந்து போட்டதாக அந்தப் பகுதி மக்கள் சொல்கின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களை பெரும் அச்சத்திற்குள் தள்ளிவிட்டது.

‘உட்சபட்ச தண்டனை கொடுக்க வேண்டும்’ சிறுமி கொலை குறித்து கனிமொழி

சிறுமி கொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவத்தில் இருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருகிறார்கள். இந்தக் கொலை தொடர்பாக காவல் துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. தமிழகத்தில் பல இடங்களில் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவது நாள்தோறும் அதிகரித்துவருவது பலருக்கும் கவலை தரும் விஷயம். இந்த வன்முறைகள் பெரும்பாலும் அச்சிறுமிகளுக்கு நன்கு தெரிந்தவர்களால் நிகழ்த்தப்படுகின்றன என்பதே பெரும் சோகம்.

சாத்தான் குளம் அருகே சிறுமி வன்முறைக்கு உள்ளானது குறித்து திமுக மகளிர் அணி செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் கீழ்க்கண்டவாறு கருத்து பதிவு செய்திருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காட்டுப்பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் வேதனையைத் தருகிறது. இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்றும் தெரியவருகிறது.

இவர்கள் உச்சபட்ச தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அதிகரித்துவரும் போதைப் பொருள் புழக்கம், பல குற்றங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

குழந்தைகளுக்கான பாதுகாப்பும் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. இந்தக் கொடுமைகளுக்கு எப்போதுதான் முடிவு கட்டுவது?