”தமிழ்நாடு வெற்றி நடை போடல, முதல்வரும் அமைச்சர்களும்தான் வெற்றி நடை போடுகின்றனர்!”

 

”தமிழ்நாடு வெற்றி நடை போடல, முதல்வரும் அமைச்சர்களும்தான் வெற்றி நடை போடுகின்றனர்!”

தருமபுரி மாவட்டம் தொப்பூர் கிராமத்தில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் நிகழ்ச்சியில், திமுக எம்பி கனிமொழி மக்கள் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, “இந்த கிராமசபைக் கூட்டத்துக்கு அதிமுக அரசு தடை போட்டது. நீங்கள் என்ன வழக்கு போட்டாலும் போட்டு கொள்ளுங்கள் என்று கூறி இந்த கூட்டத்தை நடத்துகிறோம். 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்த வில்லை. திமுக ஆட்சி அமைக்கும் என்று தெரிந்து கொண்டு 10 ஆண்டுகளில் செய்யாமல், சும்மா இருந்து விட்டு ஸ்டாலின் குறை கேட்டவுடன், மக்கள் குறைகளை சொல்ல 1100 என தனி நம்பரை முதலமைச்சர் அறிவித்து குறைகளை தெரிவிக்க சொல்கிறார். கலைஞர் மக்கள் மீது அக்கறையோடு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்.

”தமிழ்நாடு வெற்றி நடை போடல, முதல்வரும் அமைச்சர்களும்தான் வெற்றி நடை போடுகின்றனர்!”

திமுக மக்களிடம் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும். பத்தாண்டு காலமாக தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லை. 23 இலட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்துக் வருகின்றனர். திமுக ஆட்சி அமைந்தவுடன் சிப்காட் தொடங்கும். தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். தான் வெற்றி நடை போடவேண்டும் என்று முதல்வர், அமைச்சர் அதிமுகவினர் நினைக்கிறார்கள். தமிழ்நாடு வெற்றி நடைபோட யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக ஆட்சியில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் யாருக்கும் பயன்படாத இந்த ஆட்சியை தூக்கி எரியுங்கள்” எனக் கூறினார்.