திமுகவின் ‘பி’ டீமா ச‌சிகலா? ஜெயக்குமாருக்கு கனிமொழி பதில்

 

திமுகவின் ‘பி’ டீமா ச‌சிகலா? ஜெயக்குமாருக்கு கனிமொழி பதில்

இடைத் தேர்தலுக்கு முன்பே, ஸ்டாலினை, டிடிவி தினகரன் சந்தித்து பேசியதாகவும், எப்படியாவது அதிமுக அரசை கலைக்க திமுகவும் அமமுகவும் திட்டம் போடுவதாகவும் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியிருந்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ஸ்டாலினின் பி டீம்தான் சசிகலா. ஆனால் அதிமுக தொண்டர்கள் இதை அனுமதிக்க மாட்டார்கள். எத்தனை பி டீமுடன் வந்தாலும், ஸ்டாலினால் இந்த ஆட்சியை கலைக்க முடியாது” என தெரிவித்திருந்தார்.

திமுகவின் ‘பி’ டீமா ச‌சிகலா? ஜெயக்குமாருக்கு கனிமொழி பதில்

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் கனிமொழி, “அதிமுகதான் பாஜகவின் ‘பி’ டீம். திமுகவின் ‘பி’ டீமாக ச‌சிகலா செயல்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தது கண்டனத்திற்குரியது. மு.க.அழகிரி குறித்து கருணாநிதி எடுத்த நிலைப்பாடுதான் திமுகவினுடையதும். இதனையும் மீறி, தற்போது முடிவெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், மு.க.அழகிரி குறித்து ஸ்டாலின் முடிவு எடுப்பார். திமுகவிற்கு எந்த பி டீமும் தேவையில்லை. உடல்நலம் குறைவான சசிகலாவை அதிமுகவினர் தரக்குறைவாக பேசிவருகின்றனர். அதிமுகவினர் வங்கிக்கடன் தள்ளுபடி வெற்றி அறிக்கையே. வரும் தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றி பெற்று தளபதி முதல்வராவார். பாஜகவுடன் கூட்டணியில் இருப்பது தவறு என அதிமுக நினைக்கிறது.” எனக் கூறினார்.