திமுகவினருக்குள் சண்டை இருந்தாலும் தேர்தல் என்று வந்துவிட்டால் ஒன்றிணைந்துவிடுவோம்: கனிமொழி எம்பி

 

திமுகவினருக்குள் சண்டை இருந்தாலும் தேர்தல் என்று வந்துவிட்டால் ஒன்றிணைந்துவிடுவோம்: கனிமொழி எம்பி

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேர்தல் பணிகளை தமிழக கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. திமுகவை பொறுத்தவரையில் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று முதல் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “டெல்லியில் விவசாயிகள் இணைய சேவையை முடக்குவது கருத்துரிமையை தடுக்க கூடியது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை செய்து தராமல் பேச்சுவார்த்தை என்ற‌ பெயரில் இழுத்தடிப்பு செய்கின்றனர், நியாயமாக விவசாயிகளின் கோரிக்கையான வேளாண் சட்டத்தை உடனடியாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதே திமுகவின் விருப்பம், அதையே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

திமுகவினருக்குள் சண்டை இருந்தாலும் தேர்தல் என்று வந்துவிட்டால் ஒன்றிணைந்துவிடுவோம்: கனிமொழி எம்பி

குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கடுமையான சட்டங்கள் இருந்தும் முறையாக நடைமுறைபடுத்தவில்லை, பல வழக்குகளில் குற்றத்தை காவல்துறையினர் நிரூப்பிக்காத சூழ்நிலை உள்ளது, சென்சிடிவான வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறையினரை தயார் படுத்த வேண்டும், தேர்தலின் போது வாக்குக்கு பணம் கொடுப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று, மற்ற கட்சியினர் எப்படி என்று தெரியவில்லை. திமுகவை பொருத்த வரை மக்கள் செல்வாக்கு அதிகமாக உள்ளது. வெற்றி வாய்ப்பை பெறக்கூடிய நபரையே வேட்பாளராக தேர்வு செய்வோம், அரசியலுக்கு வருவது சசிகலா எடுக்க வேண்டிய முடிவு, திமுகவினர்குள் சண்டைகள் இருந்தாலும் தேர்தல் என்று வந்துவிட்டால் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிக்காக பாடுபடுவார்கள்” எனக் கூறினார்.