திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா?- கனிமொழி எம்பி

 

திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா?- கனிமொழி எம்பி

புதுக்கோட்டை மாவட்டம் சோளத்தாகோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்பதே திமுகவின் கோரிக்கை, இந்த சட்டத்தை முற்றிலுமாக திமுக எதிர்க்கிறது, அதற்காகத்தான் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழில்நுட்ப அளவில் அனைத்துக் கட்சிகளுக்கும் உதவி செய்ய நிறுவனங்கள் உள்ளனர். இதனை விமர்சனமாக மாற்ற முடியாது, திமுக மற்றவர்களைப்போல் நிமிடத்திற்கு நிமிடம் கொள்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை.

திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா?- கனிமொழி எம்பி

ஜெயலலிதா நினைவிடத்தை திறக்கக் கூடிய சூழ்நிலையில் அவர் வழியில் ஆட்சி நடத்துகிறோம் என்று கூறிவிட்டு ஜெயலலிதா தொடர்ந்து எதிர்த்து வந்த உதய் மின் திட்டம், நீட் தேர்வு உள்ளிட்டவற்றை இவர்கள் கொண்டு வந்துவிட்டு மற்றவர்களை எப்படி இவர்கள் விமர்சனம் செய்கிறார்கள், இவர்கள் புதிதாக எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை, பெண்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் அதிமுக ஆட்சியில் இல்லை. பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடந்து வருகின்றது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யாரும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இதுதான் ஜெயலலிதா வழியில் நடத்தும் ஆட்சியா? திமுகவின் வெற்றி வாய்ப்பு யார் வந்தாலும் வரவில்லை என்றாலும் நிச்சயிக்கப்பட்ட ஒன்று, திமுக வரக்கூடிய தேர்தலிலே மிகப்பெரிய வெற்றியை அடைந்து‌ திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராவார், திமுக காங்கிரஸ் கூட்டணி விரிசல் என்பது புனையப்பட்ட கதை இதனை தலைவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்” எனக் கூறினார்.