கருணாநிதியை தலைவராக ஏற்றுக்கொண்டவர் எம்.ஜி.ஆர்- கனிமொழி எம்பி அதிரடி

 

கருணாநிதியை தலைவராக ஏற்றுக்கொண்டவர் எம்.ஜி.ஆர்- கனிமொழி எம்பி அதிரடி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி., “கருணாநிதியை தலைவராக ஏற்றுக்கொண்டவர் எம்.ஜீ.ஆர். ஆகையால் அவர் பெயரை மு.க.ஸ்டாலின் சொல்லுவதில் தவறு இல்லை, மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைந்து நிவாரண தொகை, பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று திமுக தலைவரும், நானும் வலியுறுத்தி உள்ளோம். விரைந்து விவசாயிகளுக்கு நிவாரணத்தினை அரசு வழங்க வேண்டும். மழைநீர் வடிகால் அமைக்கப்படாத காரணத்தினால் மழைநீர் பல பகுதியில் தேங்கும் சூழ்நிலை உள்ளது. இதற்கான முயற்சியை தமிழக அரசு செய்யவில்லை. தமிழகத்தில் பல பகுதியில் மழை நீர் இன்னும் தேங்கியுள்ளது. இதனை வெளியேற்றுவது மட்டுமின்றி, நிரந்தர தீர்வும் காண வேண்டும்

கருணாநிதியை தலைவராக ஏற்றுக்கொண்டவர் எம்.ஜி.ஆர்- கனிமொழி எம்பி அதிரடி

அதிமுக உட்கட்சி பிரச்சினை பற்றி பேச விரும்பவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்று சில ஆலோசனைகளை செய்து சசிகலாவை கட்சியின் இணைத்து கொள்ள மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். இது பற்றி அதிமுக கட்சி தான் முடிவு எடுக்க வேண்டும் நாங்கள் சொல்ல முடியாது. மு.க.ஸ்டாலின் எம்.ஜீ.ஆரின் ரசிகர் தான், கருணாநிதி, அண்ணா இருவரின் தொண்டர் மு.க.ஸ்டாலின். எம்.ஜீ.ஆர் பெயரை மு.க.ஸ்டாலின் அரசியல் லாபத்திற்காக எடுக்கவில்லை. எம்.ஜீ.ஆர் திரைப்படங்களை ரசிகராக ரசித்துள்ளேன் என்று மு.க.ஸ்டாலின் சொன்னார். ஒருகாலத்தில் கருணாநிதியை தலைவராக ஏற்றுக்கொண்டவர் எம்.ஜீ.ஆர். ஆகையால் அவர் பெயரை மு.க.ஸ்டாலின் சொல்லுவதில் தவறு இல்லை.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை கூட தீர்ப்பதற்கு தயராக இல்லாத அதிமுக அரசு, யாரை பற்றியும் பேசக்கூடாது. ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை தீர்க்கட்டும். அதன் பின்னர் மற்றவர்களை பற்றிய விமர்சனங்களை வைக்கட்டும். திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 200 இடங்களுக்கு மேல் திமுக வெற்றி பெறும்” எனக் கூறினார்.