ஸ்டாலின் அறிக்கை நாயகன் என்றால் எடப்பாடி பழனிசாமி அரசாணை நாயகன் – கனிமொழி

 

ஸ்டாலின் அறிக்கை நாயகன் என்றால் எடப்பாடி பழனிசாமி அரசாணை நாயகன் – கனிமொழி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் திமுக மகளிா் அணி மாநில செயலாளார் கனிமொழி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய கனிமொழி, “நாளைக்கு தோ்தல் வைத்தாலும் மக்களுக்கு மகிழ்ச்சிதான். இந்த ஆட்சி எப்போது முடியும் என மக்கள் காத்துக்கொண்டுள்ளனா். திமுக சாா்பில் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டோம். முதல்வா் என்னை பாா்த்து கேட்கிறாா் பாா்வை கோளாறா என்று எனக்கு பாா்வை கோளாறு இருந்துட்டுப்போகட்டும் பிரச்சனை இல்லை. ஆனால் மக்களுக்கே கோளாறாக முதல்வா் வந்துள்ளாா். ஒவ்வொரு திட்டத்திற்கும் அடிக்கல் மட்டுமே நாட்டப்படுகிறது திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. அதை முதல்வரே கூறுகிறாா். ஸ்டாலினை பாா்த்து அறிக்கை நாயகன் என்று கூறுகிறாா். அரசாணை நாயகன் என்று நாங்கள் கூறலாமா? வெறும் அரசாணை மட்டுமே வருகிறது.

ஸ்டாலின் அறிக்கை நாயகன் என்றால் எடப்பாடி பழனிசாமி அரசாணை நாயகன் – கனிமொழி

இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு துரோகம் செய்பவா் தான் முதல்வா் பழனிச்சாமி. அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் ஆர்வமாக உள்ளனர். நாளைக்கே தேர்தல் வைத்தாலும் திமுகவிற்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். இது டெண்டர் ஆட்சி. நெடுஞ்சாலை டெண்டர்கள் அனைத்தும் முதல்வரின் உறவினர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. பள்ளிகள் திறப்பது குறித்தும் பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்தும் முதலில் குழு அமைத்தது ஸ்டாலின்தான்.

40 ஆண்டு கால மூத்த அமைச்சர் செங்கோட்டையன் இன்று சுயமாக முடிவெடுக்க முடியாமல் பழனிச்சாமி முன் கைக்கட்டி நிற்கிறார். அவரை நினைத்தால் பாவமாக உள்ளது. எந்த முடிவு எடுத்தாலும் முதல்வர் தான் அறிவிப்பார் என கூறுவதற்கு பள்ளி கல்வித்துறைக்கென தனி அமைச்சர் தேவையா?. கல்வியை காவியாக்கும் ஆட்சியாகவும் பாஜகவின் கைக்கூலி அடிமைகள் ஆட்சி தான் தமிழகத்தில் நடந்து வருகிறது. அமித்ஷா என்ன சொல்கிறரோ அதனை அப்படியே செய்து வருகிறார் முதல்வர். ஏழை மாணவர்களுக்காக 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை பெற்று தந்தவர் ஸ்டாலின்” எனக் கூறினார்.