தமிழ்நாட்டில் நீட் இல்லாத நிலை உருவாகும் – திமுக எம்.பி. கனிமொழி

 

தமிழ்நாட்டில் நீட் இல்லாத நிலை உருவாகும் – திமுக எம்.பி. கனிமொழி

தமிழ்நாட்டில் நீட் தேர்வு இல்லாத நிலையை முதல்வர் உருவாக்கி காட்டுவார் என்றும், விவசாய கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியையும் முதல்வர் நிச்சயமாக நிறைவேற்றுவார் என்றும் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நீட் இல்லாத நிலை உருவாகும் – திமுக எம்.பி. கனிமொழி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள வேளாண்மை அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக சமூக நலம் மற்று மகளிர் உரிமைத்துறை அமைசர் கீதாஜீவன், எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். தொடர்ந்து இசைமாமேதை நல்லப்பசுவாமிகள் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கோட்டாட்சியர் சங்கரநாரயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி., “நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பதற்காக அதைப்பற்றி ஆய்வு செய்ய முதல்வர் ஒரு குழுவினை அமைத்துள்ளார். நீட் தேர்வினை தொடர்ந்து திமுக எதிர்த்து வருகிறது. மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவோம், நீட் தேர்வு இல்லாத நிலையை முதல்வர் உருவாக்கி காட்டுவார். தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக முதல்வர் நிறைவேற்றி வருகிறார். விவசாய கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியையும் நிச்சயமாக முதல்வர் நிறைவேற்றுவார்” எனக் கூறினார்.