“அண்ணன் ஸ்டாலினுக்கு….” தங்கை கனிமொழி ட்வீட்!

 

“அண்ணன் ஸ்டாலினுக்கு….”  தங்கை கனிமொழி ட்வீட்!

திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு அவரது தங்கையும், எம்பியுமான கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“அண்ணன் ஸ்டாலினுக்கு….”  தங்கை கனிமொழி ட்வீட்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தனது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா, திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

“அண்ணன் ஸ்டாலினுக்கு….”  தங்கை கனிமொழி ட்வீட்!

அவருடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன். டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டுபல்வேறு அரசியல் கட்சிதலைவர்கள், நிர்வாகிகள் , தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “தலைவர் தளபதி அண்ணன் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!அவர் தமிழகத்திற்கு ஒரு புதிய விடியலை தரப்போகிறார். அவரது தலைமையில் அமையவிருக்கும் தி மு கழக ஆட்சியில் தமிழகம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும்.#HBDStalin ” என்று பதிவிட்டுள்ளார்