’அமெரிக்காவில் போட்டியிடும் இந்திய-தமிழ்ப் பெண்’ கனிமொழி பெருமிதம்

’அமெரிக்காவில் போட்டியிடும் இந்திய-தமிழ்ப் பெண்’ கனிமொழி பெருமிதம்

நவம்பர் மாதம் அமெரிக்காவின அடுத்த தேர்தல் நடக்க விருக்கிறது. அதற்கான ஆயத்த வேலைகளை அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார்.  ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகக் களம் இறங்குகிறார் ஜோ பிடன்.

’அமெரிக்காவில் போட்டியிடும் இந்திய-தமிழ்ப் பெண்’ கனிமொழி பெருமிதம்

இந்நிலையில் ஜோ பிடன், துணை அதிபராகப் போட்டியிட  இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்திருக்கிறார். இது பலருக்கும் ஆச்சர்யம். இந்தியர்களுக்குப் பெருமிதம். பலரும் பாராட்டுகளை கமலாவுக்குத் தெரிவித்து வருகிறார்கள்.

கமலா கடந்த அதிபர் தேர்தலில் இவரும் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். கலிஃபோர்னியாவின் செனட்டராக தற்போது பதவி வகிக்கிறார்.

’அமெரிக்காவில் போட்டியிடும் இந்திய-தமிழ்ப் பெண்’ கனிமொழி பெருமிதம்

கமலா ஹாரீஸ் சென்னையைச் சேர்ந்த பெண் என்பது வியப்புக்கு உரிய செய்தி. இவரின் அம்மா ஷியமளா கோபாலன் இந்தியாவை அதிலும் தமிழகத்தைச் சேர்ந்தவர். அப்பா டொனால்டு ஹாரிஸ், ஜமைக்காவைச் சேர்ந்தவர். கமலாவும் சென்னையில் வளர்ந்திருக்கிறார்.

’அமெரிக்காவில் போட்டியிடும் இந்திய-தமிழ்ப் பெண்’ கனிமொழி பெருமிதம்

துணை அதிபருக்குப் போட்டியிடும் கமலா ஹாரீஸை வாழ்த்தி பதிவிட்டுள்ளார் திமுக மகளிரணி செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி.

’அமெரிக்க துணை அதிபருக்கான ஜனநாயக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.  இந்திய தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர் கமலா என்பதில் பெருமை. அவருக்கு என் வாழ்த்துகள்’ என்பதாகப் பதிவிட்டுள்ளார்.