PPE kit அணிந்து வாக்கு பதிவு செய்த கனிமொழி

 

PPE kit அணிந்து வாக்கு பதிவு செய்த கனிமொழி

தமிழகத்தில் கொரோன பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா இரண்டாம் அலை பரவ தொடங்கிய நிலையில் அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்கும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 3,672 பேருக்கு கொரோனா உறுதியாகியது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த ண்ணிக்கை 9,03,479 ஆக உயர்ந்தது. கடந்த வாரம் திமுக எம்.பியும் ஸ்டாலினின் சகோதரியுமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதியானது. தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வாக்களித்தார்.

PPE kit அணிந்து வாக்கு பதிவு செய்த கனிமொழி

6 மணி முதல் 7 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் திமுக மகளிரணி செயலாளரும், எம்பியுமான கனிமொழி மயிலாப்பூர் எப்பாஸ் பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடிக்கு கவச உடையுடன் வந்து தனது வாக்கை பதிவு செய்தார். வாக்குச்சாவடியில் பணிபுரியும் அனைவருக்கும் பாதுகாப்பு கவசம் வழங்கப்பட்டது.