திமுகவின் பொருளாளர் பதவிக்கு கனிமொழி, ஆ.ராசா போட்டியிடவில்லை!

 

திமுகவின் பொருளாளர் பதவிக்கு கனிமொழி, ஆ.ராசா போட்டியிடவில்லை!

திமுகவின் பொருளாளர் பதவிக்கு போட்டியிடவில்லை என திமுக எம்பி கனிமொழியும் திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசாவும் தெரிவித்துள்ளனர்.

திமுகவின் பொதுக்குழு கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் நடக்கவிருந்தது. அந்த கூட்டம் கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்டதால், நாளை நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் நேற்று அறிவித்தார். சமீபத்தில் திமுகவின் பொதுச் செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகன் காலமானதால், அவரது பதவிக்கு வேறு ஒருவரை தேர்வு செய்ய வேண்டிய சூழல் நிலவியது.

திமுகவின் பொருளாளர் பதவிக்கு கனிமொழி, ஆ.ராசா போட்டியிடவில்லை!

அந்த பதவி திமுகவின் மூத்த நிர்வாகியான துரைமுருகனுக்கு அளிக்கப்பட்டு, பின்னர் நீக்கப்பட்டது. அதனால் வரும் 9 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் திமுகவின் பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அந்த பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் இன்று வேட்பு மனு பெறலாம் என ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனிடையே பொருளாளர் பதவி கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா தேர்தெடுக்கப்பட உள்ளதாகவும், பொதுச் செயலாளர் பதவி மீண்டும் துரைமுருகனுக்கே வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது.

திமுகவின் பொருளாளர் பதவிக்கு கனிமொழி, ஆ.ராசா போட்டியிடவில்லை!

இந்த நிலையில் திமுகவின் பொருளாளர் பதவிக்கு போட்டியிட மாட்டேன் என ஆ.ராசா தெரிவித்துள்ளார். அந்த பதவிக்கு போட்டியிடாததால் வேட்பு மனுவை இன்று பெற மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். அதே போல கனிமொழியும் தான் பொருளாளர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என கூறியிருக்கிறார். மக்களை குழு தலைவராக இருக்கும் டி.ஆர் பாலு பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.