குக்வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னரானார் காரக்குழம்பு கனி!

 

குக்வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னரானார் காரக்குழம்பு கனி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக்வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னராக கனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டிஆர்பியில் நம்பர் ஒன் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருக்கும் விஜய் டிவியின் குக் வித் கோமாளி, நிகழ்ச்சி பிரபலங்கள் அனைவருமே மக்கள் மத்தில் பிரபலமானவர்கள். நகைச்சுவையாக பேசி இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்துக்கொள்ளும் இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சமையல் நிகழ்ச்சியில் நகைச்சுவையை புகுத்தியிருப்பதாலேயே இந்நிகழ்ச்சி குறுகிய காலத்தில் நன்கு ரீச் ஆனது.

குக்வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னரானார் காரக்குழம்பு கனி!

இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதா விஜயகுமார் டைட்டில் வின்னரானார். இரண்டாவது சீசனில் புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கோமாளிகளாக களமிறக்கப்பட்டதால் முதல் சீசனை விட இரண்டாவது சீசன் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. குக் ஆக, மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்துகொண்ட நிலையில் அஸ்வின், கனி, பாபா பாஸ்கர், ஷகிலாவும், பவித்ரா லட்சுமி ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். இதில் குக் வித் கோமாளி சீசன் 2 வின்னராக காரக்குழம்பு கனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வெற்றிக் கோப்பையுடன் ரூ. 5 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. விருதுக்கு கனி ட்விட்டைல் நன்றி தெரிவித்துள்ளார்.