காங்கேயத்தில் அதிமுக கல்வெட்டு சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து சாலை மறியல்!

 

காங்கேயத்தில் அதிமுக கல்வெட்டு சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து சாலை மறியல்!

திருப்பூர்

காங்கேயம் திரு.வி.க நகரில் அதிமுக சார்பில் வைக்கப்பட்ட கல்வெட்டை மர்மநபர்கள் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஒன்றாவது வார்டில் உள்ள திரு.வி.க. நகருக்கும், ஏ.சி.நகருக்கும் இடையே செல்லும் பி.ஏ.பி கால்வாயில் பாலம் கட்ட அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 2016-17ஆம் ஆண்டில் தொகுதி எம்எல்ஏவான தனியரசு, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15.50 லட்சம் ஒதுக்கீடு செய்து பாலம் கட்டப்பட்டது.

காங்கேயத்தில் அதிமுக கல்வெட்டு சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து சாலை மறியல்!

இதனையொட்டி, பாலத்தில் வைக்கப்பட்ட கல்வெட்டில் எம்எல்ஏ தனியரசு, நகராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இந்த நிலையில், கடந்த 2ஆம் தேதி இரவு கல்வெட்டை மர்மநபர்கள் சேதப்படுத்தி, அதில் இருந்த பெயர்களையும் அழித்தனர். இந்த விவகாரம் குறித்து, பொதுப் பணித்துறை சார்பில் காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், கல்வெட்டு சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து, முன்னாள் நகராட்சி துணை தலைவர் கந்தசாமி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலின் பேரில் அவர்களை விரைந்து சென்று தடுத்த போலீசார், குற்றவாளிகள் மீது 1 வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் தாராபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.