பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான தலித் பெண் மரணம்… பொங்கிய கங்கனா ரனாவத்… விமர்சித்த டிவிட்டர்வாசிகள்

 

பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான தலித் பெண் மரணம்… பொங்கிய கங்கனா ரனாவத்… விமர்சித்த டிவிட்டர்வாசிகள்

உத்தர பிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தலித் பெண் சிகிச்சை பலன் இன்றி இறந்தது குறித்து கருத்து தெரிவித்த நடிகை கங்கனா ரனாவத்தை டிவிட்டர்வாசிகள் விமர்சனம் செய்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் ஹத்ராஸில் 19 வயது தலித் பெண் உயர் சாதியை சேர்ந்த 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த பெண் சுமார் 2 வாரங்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று மரணம் அடைந்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். நடிகை கங்கனாவும் டிவிட்டரில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் அதனை சில டிவிட்டர்வாசிகள் கிண்டலும் விமர்சனமும் செய்து இருந்தனர்.

பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான தலித் பெண் மரணம்… பொங்கிய கங்கனா ரனாவத்… விமர்சித்த டிவிட்டர்வாசிகள்
கங்கனா ரனாவத்

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தலித் பெண் மரணம் தொடர்பாக டிவிட்டரில், இந்த கற்பழிப்பாளர்களை பகிரங்கமாக சுடவேண்டும், ஒவ்வொரு ஆண்டும் எண்ணிக்கையில் அதிகரித்து வரும் இந்த கும்பல் கற்பழிப்புகளுக்கு என்ன தீர்வு? இந்த நாட்டுக்கு என்ன ஒரு சோகமான மற்றும் வெட்கக்கேடான நாள். நமக்கு அவமானம். நாம் நம் மகள்களை தவறவிடுகிறோம் என பதிவு செய்து இருந்தார்.

பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான தலித் பெண் மரணம்… பொங்கிய கங்கனா ரனாவத்… விமர்சித்த டிவிட்டர்வாசிகள்
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேச அரசு பெயரை குறிப்பிடாமல் கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்து இருப்பதை டிவிட்டர்வாசிகள் கிண்டல் செய்துள்ளனர். ஒரு டிவிட்டர்வாசி, உத்தவ் தாக்கரே மற்றும் மும்பை குறித்த பேசுவது போல் யோகி ஆதித்யநாத் மற்றும் உத்தர பிரதேசம் குறித்து ஏதாவது வார்த்தைகள்? என பதிவு செய்து இருந்தார். மற்றொருவர், யோகி ஆதித்யநாத்தை நீங்கள் கேள்வி கேட்க மாட்டீர்களா? அல்லது உங்கள் குரல் பா.ஜ.க. அல்லாத அரசாங்கத்தை மட்டும் கேள்வி கேட்குமா? பா.ஜ.க.வை சேர்ந்த பி.டி.டபிள்யூ, சின்மியானந்த் மற்றும் குல்தீப் செங்கரும் கற்பழிப்பாளர்கள் அவர்களை பகிரங்கமாக சுட்டுக்கொள்வது எப்படி? என பதிவு செய்து இருந்தார்.