“கொரோனா ஒரு சாதா காய்ச்சல்” – கங்கனாவின் பதிவை தூக்கிய இன்ஸ்டா!

“கொரோனா ஒரு சாதா காய்ச்சல்” – கங்கனாவின் பதிவை தூக்கிய இன்ஸ்டா!

கங்கனா ரணாவத்தை திரைப்பட நாயகி என்று சொல்வதைக் காட்டிலும் சர்ச்சைகளின் நாயகி என்று சொல்வதே சாலச் சிறந்தது. அந்தளவிற்கு தனது பிற்போக்குத்தனமான கருத்துகளால் நெட்டிசன்களிடம் வாங்கி கெட்டி கொண்டார். தொடர்ந்து போலிச் செய்திகளையும் அவதூறுகளையும் பரப்பி வந்த அவரின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியது.

“கொரோனா ஒரு சாதா காய்ச்சல்” – கங்கனாவின் பதிவை தூக்கிய இன்ஸ்டா!

தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார். அங்கே சென்றும் அதே வேலையைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். இச்சூழலில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகப் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில் கொரோனாவை மிக சாதாரணமான காய்ச்சல் தான். ஊடகங்கள் தான் பெரிதுப்படுத்தி மக்களைப் பயமுறுத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அது சாதாரண காய்ச்சல் என்றால் ஏன் உலகம் முழுவதும் முழு ஊரடங்கு போட வேண்டும் என்று கூட அவரது புத்திக்கு எட்டவில்லை என்றே தோன்றுகிறது. அவர் ஆதரவளிக்கும் பிரதமர் மோடிக்கு என்ன வேண்டுதலா?

“கொரோனா ஒரு சாதா காய்ச்சல்” – கங்கனாவின் பதிவை தூக்கிய இன்ஸ்டா!

அது ஒருபுறம் இருந்தாலும் மக்களுக்கு நன்கு பரிட்சையமான ஒரு இடத்தில் இருந்துகொண்டு இதுபோன்ற பொய்ச் செய்திகளையும் போலிகளையும் பரப்பிக் கொண்டு சமூக வலைதளங்களில் வலம் வருகிறார்.

“கொரோனா ஒரு சாதா காய்ச்சல்” – கங்கனாவின் பதிவை தூக்கிய இன்ஸ்டா!

இதனால் தான் ட்விட்டர் அவரது கணக்கிற்கு நிரந்தர மூடுவிழா நடத்தியது. ஆனால் இன்னமும் திருந்தாமல் இன்ஸ்டாகிராமிலும் தனது அடாவடித்தனத்தைத் தொடர்கிறார். கொரோனாவை சாதாரண காய்ச்சல் என்று கூறியதால் தற்போது அவரின் பதிவை இன்ஸ்டாவும் நீக்கியுள்ளது.