பெண்கள் உயிரோடு எரிக்கப்பட்ட பழங்காலத்தை நோக்கி நகர்கிறோமா? கங்கனா கேள்வி

 

பெண்கள் உயிரோடு எரிக்கப்பட்ட பழங்காலத்தை நோக்கி நகர்கிறோமா? கங்கனா கேள்வி

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தானும் தனது சகோதரியும் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருவதாக காணொலி ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

பெண்கள் உயிரோடு எரிக்கப்பட்ட பழங்காலத்தை நோக்கி நகர்கிறோமா? கங்கனா கேள்வி

கங்கனா ரனாவத் வெளியிட்டுள்ள வீடியோவில், மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சித்ரவதைக்கு உள்ளாகியுள்ளேன். இந்த தேசத்திலிருந்து எனக்கு பதில் தேவை. . நான் உங்களுக்காக நின்றேன், நீங்கள் எனக்காக நிற்கும் நேரம் இது … ஜெய் ஹிந்த் என்ற வாசகங்களுடன் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/KanganaTeam/status/1347433867683131393

அண்மையில் சமூக வலைதளங்களில் சர்ச்சையான கருத்துகளைப் பகிர்ந்துவருவதாகக் கூறி கங்கனா மீதும் அவரது தங்கை மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நாட்டிற்காக குரல் கொடுக்க தொடங்கியதில் இருந்து நான் எப்படி சித்திரவதைச் செய்யப்படுகிறேன் என நாடே அறியும். என் வீடு இடிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு ஆதரவாக பேசியதால் வழக்குகள் போடப்பட்டன.
நான் சிரித்தால்கூட என் மீது வழக்கு போட்டார்கள். கொரோனா தொற்று பரவ தொடங்கிய ஆரம்ப கால கட்டத்தில் மருத்துவர்கள் படும் சித்திரவதைக்கு எதிராக எனது சகோதரி ரங்கோலி போராடினார். அதற்காக என்மீது, என் சகோதரி மீது வழக்கு தொடுத்தனர். உச்ச நீதிமன்றத்திடம் ஒரு கேள்வி கேட்க விருகிறேன். பெண்கள் உயிருடன் எரிக்கப்பட்ட, அவர்களின் குரல்கள் ஒடுக்கப்பட்ட அந்தப் பழங்காலத்திற்கு நாம் சென்றுவிட்டோமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.