நான் சில அமைச்சரா அல்லது சிறந்த எதிர்க்கட்சி தலைவரா? காங்கிரசுக்கு பதிலடி கொடுத்த பாலிவுட் நடிகை

 

நான் சில அமைச்சரா அல்லது சிறந்த எதிர்க்கட்சி தலைவரா? காங்கிரசுக்கு பதிலடி கொடுத்த பாலிவுட் நடிகை

பஞ்சாப் காங்கிரசார் தனது உருவ பொம்மையை எரித்தற்கு, நான் சில அமைச்சரா அல்லது சிறந்த எதிர்க்கட்சி தலைவரா? என்று அவர்களுக்கு நடிகை கங்கனா ரனாவத் பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகை கங்கனா ரனாவத்துக்கும், மகாராஷ்டிராவில் ஆளும் கட்சியான சிவ சேனாவுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக கடும் வார்த்தை போர் நிலவியது. சிவ சேனாவின் அச்சுறுத்தலுக்கு கொஞ்சமும் அசராமல் கங்கனா ரனாவத் அந்த கட்சி தலைவர்களை வறுத்தெடுத்தார். தற்போது பஞ்சாப் காங்கிரசார் கங்கனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நான் சில அமைச்சரா அல்லது சிறந்த எதிர்க்கட்சி தலைவரா? காங்கிரசுக்கு பதிலடி கொடுத்த பாலிவுட் நடிகை
கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத் அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள் என கூறியதாக தகவல் வெளியானது. ஆனால் கங்கனா ரனாவத் அப்படி கூறவில்லை என்று தெரிவித்தார். இருந்தாலும் பல்வேறு தரப்பினரும் கங்கனாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பஞ்சாப் காங்கிரசார் ஒரு படி மேலே போய் கங்கனாவின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர். கங்கனா ரனாவத் இதற்கும் கொஞ்சம் கூட அசரவில்லை.

நான் சில அமைச்சரா அல்லது சிறந்த எதிர்க்கட்சி தலைவரா? காங்கிரசுக்கு பதிலடி கொடுத்த பாலிவுட் நடிகை
கங்கனா ரனாவத் உருவபொம்மை எரிப்பு

நடிகை கங்கனா ரனாவத் இது தொடர்பாக டிவிட்டரில், மகாராஷ்டிராவில் காங்கிரசார் என்னை முதலில் மிரட்டினார்கள், என்னுடைய பட போஸ்டர்களை செருப்பால் அடித்தார்கள். தற்போது பஞ்சாபில் என் உருவ பொம்மையை எரிக்கிறார்கள். தவறான அடையாளத்தின் தெளிவான வழக்கு போல் தெரிகிறது. நான் சில அமைச்சரா அல்லது சிறந்த எதிர்க்கட்சி தலைவரா? நான் யார் என்று அவர்கள் நினைக்கிறார்கள்? இது மிகவும் புகழ்ச்சி அளிக்கிறது என பதிவு செய்து இருந்தார்.