கங்கனா ரனாவத் அலுவலகம் இடிப்பு – சிவசேனாவுக்கு தொடர்பில்லை!

 

கங்கனா ரனாவத் அலுவலகம் இடிப்பு – சிவசேனாவுக்கு தொடர்பில்லை!

கங்கனா ரனாவத்தின் அலுவலகத்தை இடித்ததற்கும் சிவசேனாவுக்கும் தொடர்பில்லை என சிவசேனாவின் தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதற்கு சிவசேனா கடுமையான கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து கங்கனாவுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். அவர் மும்பைக்குள் வர கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் கங்கனா ரனாவத்துக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது.

கங்கனா ரனாவத் அலுவலகம் இடிப்பு – சிவசேனாவுக்கு தொடர்பில்லை!

இதை தொடர்ந்து மும்பையில் கங்கனாவின் மணிகர்ணிகை அலுவலகம் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியதுடன் கட்டடத்தை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று இடிக்க தொடங்கியது அதிர்ச்சியை அளித்தது. இதை தொடர்ந்து பந்தராவில் அலுவலகத்தை இடிக்க தொடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கங்கனா மாநில உயர் நீதிமன்றம் மனுதாக்கல் செய்ததை தொடர்ந்து அலுவலகத்தை இடிக்க நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகை கங்கனா, உத்தவ் தாக்கரே, எனது கட்டடத்தை இடித்ததன் மூலம் என்னை பழிவாங்கியதாக நினைக்கிறீர்கள். உங்கள் ஆட்சி முடிவுக்கு வரும். எனக்கு மக்கள் ஆதரவு உள்ளது. உங்களுடைய செயல் கொடூரமானது, பயங்கரமானது என்று விமர்சித்தார்.

கங்கனா ரனாவத் அலுவலகம் இடிப்பு – சிவசேனாவுக்கு தொடர்பில்லை!

இந்நிலையில் கங்கனா ரனாவத்தின் அலுவலகத்தை இடித்ததற்கும் சிவசேனாவுக்கும் தொடர்பில்லை என சிவசேனாவின் தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநகராட்சி மேயர் அல்லது ஆணையரை தான் கேட்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.