நோய்களை நீக்கும் கந்த சஷ்டி கவசம்!

 

நோய்களை நீக்கும் கந்த சஷ்டி கவசம்!

உலகம் முழுவதும் நாளுக்குநாள் கொரோனா தொற்று தலைவிரித்தாடும் தற்போது சூழலில், மருத்துவமும், அரசும் கைவிட்ட நிலையில், திக்கற்றவர்களுக்கு துணையாக இருப்பது தெய்வமே. தொற்றின் பிடியிருந்து எல்லோரையும் காப்பாற்றிட, சஷ்டி நாளில் நம்பிக்கையோடு கந்த சஷ்டி கவசத்தை முன்னெடுப்போம். நிச்சயம் நல்லதே நடக்கும்.

நோய்களை நீக்கும் கந்த சஷ்டி கவசம்!

விஞ்ஞானத்தில் உச்சம் பெற்ற நாடுகளிலும் கூட, இந்நோயிலிருந்து விடுபட முடியாமல், மருந்தில்லா நோய்க்கு தெய்வமே துணை நிற்கும் என சரணடைந்து விட்ட நேரமிது. இந்நேரத்தில், கந்த சஷ்டி கவசத்தை இயற்றிய பால தேவராயர் தீரா நோயுற்றிருந்தார். நோய் என்றால் கடும் நோய் எந்த மருந்துக்கும் அடங்காத கொடும் நோய். மருந்தில்லா நோய்க்கு மரணமே தீர்வென கிளம்பினார் தேவராயர்.
இறுதியாக, திருச்செந்தூர் முருகனிடம் வேண்டிவிட்டு தற்கொலை செய்துக்கொள்ளாலம் என முடிவெடுத்து ஆலயம் சென்றவருக்கு

நோய்களை நீக்கும் கந்த சஷ்டி கவசம்!

முருகபெருமான் காட்சியளித்து ஒரு பதிகம் இயற்றுமாறும் அது அவர் நோயினை மட்டுமல்ல உலக மக்களின் நோயினை எல்லாம் நீக்கும் பாடல் என்றும், யாரெல்லாம் படிக்கின்றார்களோ அவர்கள் நோயும் அவர்கள் வேண்டுவோரின் நோயும் தீரும் என சொல்லி காட்சி தந்து அருள் புரிந்தார் கண்கண்ட தெய்வமான கந்தன்.

நோய்களை நீக்கும் கந்த சஷ்டி கவசம்!

அந்த இடத்தில் இருந்து முருகப் பெருமானை மனதில் நிறுத்தி பாட தொடங்குகின்றார் பால தேவராயர், அவர் பாடி முடிக்கவும் அவரின் கொடும்நோய் அகன்றது. அந்த மகிழ்ச்சியில் அறுபடை வீடெல்லாம் சென்று அந்த பாடலை தொகுத்து முடிக்கின்றார். அந்தப் பாடல்தான் கந்த சஷ்டி கவசமாகும்.

-வித்யா ராஜா