கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து விபத்து – காணாமல்போன 8 பேரை தேடும் பணி தீவிரம்!

கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து விபத்து – காணாமல்போன 8 பேரை  தேடும் பணி தீவிரம்!

கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் காணாமல்போன 8 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து விபத்து – காணாமல்போன 8 பேரை  தேடும் பணி தீவிரம்!

காஞ்சிபுரம் மாவட்டம் மதூர் கிராமத்தில் தனியார் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்து கோர விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். அத்துடன் பொக்லைன் இயந்திரம். கனரக லாரி உள்ளிட்ட வாகனங்களும் மண் மற்றும் பாறைகளின் இடுக்கில் சிக்கியது.

கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து விபத்து – காணாமல்போன 8 பேரை  தேடும் பணி தீவிரம்!

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பாறைகளை அகற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். இதில் மணிகண்டன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். அத்துடன் சோனா அன்சாரி மற்றும் சுரேஷ் ஆகியஇருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அத்துடன் காணாமல் போன 8 பேரை மீட்கும் பணி இரண்டாவது நாளாக இன்றும் தொடங்கியுள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த பணியை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.