`மனைவிக்கு டெலிவரி நேரம்; இ-பாஸ் கிடைக்கவில்லை!’- தனியார் ஊழியர் எடுத்த விபரீதம்

மனைவியின் டெலிவரிக்கு காஞ்சிபுரத்திலிருந்து சென்னை செல்ல இ-பாஸ் கிடைக்காத சோகத்தில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷவரன் (28). இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தார். இவருக்கும் சென்னையைச் சேர்ந்த ரோஜாவுக்கும் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப்பிறகு ரோஜாவும் விக்கியும் காஞ்சிபுரத்தில் குடியிருந்து வந்தனர்.

இந்த நிலையில் ரோஜா கர்ப்பமடைந்தார். இதனால் பிரசவத்துக்காக தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார் ரோஜா. கொரோனா ஊரடங்கு காரணமாக விக்கியால், மனைவியைச் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது. இன்னும் சில தினங்களில் ரோஜாவுக்கு குழந்தைப் பிறக்கும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். அதனால் தனது கணவரை செல்போனில் தொடர்பு கொண்ட ரோஜா, “டெலிவரி நேரத்தில் நீங்களும் என் கூட இருந்தால் தைரியமாக இருக்கும்” என கூறியுள்ளார். அப்போது விக்கி, கண்டிப்பாக வந்துவிடுகிறேன் என்று உறுதியளித்துள்ளார்.

இதையடுத்து காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு செல்ல இ-பாஸிக்கு விக்கி விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் இ-பாஸ் கிடைக்கவில்லை. இதனால் மனைவியைச் சந்திக்க முடியாமல் மனவேதனையில் இருந்த விக்கி, இதுகுறித்து வீட்டில் உள்ளவர்களிடமும் சொல்லி புலம்பியுள்ளார். இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு விக்கி தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையே, விக்கியைச் சந்திக்க அவரது நண்பர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது விக்கி தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து சிவ காஞ்சி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம், சம்பவ இடத்துக்கு வந்து விக்கியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விக்கி தற்கொலை குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

டெலிவரி நேரத்தில் மனைவியுடன் இருக்க இ-பாஸ் கிடைக்காத நிலையிலும் குழந்தையை பார்க்க முடியாத நிலையிலும் வேதனையில் கணவர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Most Popular

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை...

`குளிக்கச் சென்றவர் சடலமாக கிடந்தார்!’- திருமணமான 45வது நாளில் இளம்பெண்ணுக்கு நடந்த துயரம்

திருமணமான 45-வது நாளில் குளிக்கச் சென்ற இளம்பெண் குளியலறைக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் டவுன் பகுதியைச்...

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் மதிப்பும், மரியாதையும் கூடும்!

இன்றைய ராசிபலன்கள் 06-07-2020  (திங்கட்கிழமை) நல்லநேரம் காலை 6.15 முதல் 7.15 வரை மாலை 4.45 முதல் 5.45 வரை ராகுகாலம் காலை 7.30 முதல் 9 வரை எமகண்டம் காலை 10.30 முதல் 12 வரை மேஷம் பணவரவு அதிகரிக்கும். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆதரவும்...

அடுத்தடுத்து திருப்பங்கள். பா.ஜ.க. தலைவர் நட்டாவை சந்திக்கும் சச்சின் பைலட்…பெரும்பான்மையை இழக்கும் காங்கிரஸ்

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே நீண்ட நாட்களாக மன கசப்பு இருந்து வந்தது. தற்போது...
Open

ttn

Close