காஞ்சிபுரம் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில், பொது பார்வையாளர் ஆய்வு!

 

காஞ்சிபுரம் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில், பொது பார்வையாளர் ஆய்வு!

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையை, தேர்தல் பொது பார்வையாளர் ராகேஷ்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படக் கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், ஊடக மையம் மற்றும் 1950 வாக்காளர் வலைதள உதவி மையங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆலந்தூர் மற்றும் ஶ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பொதுப் பார்வையாளராக நியமிக்கப்பட்டு உள்ள ராகேஷ்குமார் வர்மா இன்று ஆட்சியர் அலுவகம் வந்தார்.

காஞ்சிபுரம் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில், பொது பார்வையாளர் ஆய்வு!

அப்போது, சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மகேஷ்வரியை சந்தித்து, அவர் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து, ஆட்சியரகத்தில் செயல்பட்டு வரும் ஊடக மையம் மற்றும் தேர்தல் கட்டுபபாட்டு அறையை ராகேஷ்குமார் வர்மா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, தேர்தல் முறைகேடுகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் மகேஷ்வரி எடுத்துரைத்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.