காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், பங்குனி உத்திர திருக்கல்யாணம்!

 

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், பங்குனி உத்திர திருக்கல்யாணம்!

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் நேற்று பங்கு உத்திர திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

பஞ்சபூத தலங்களில் ஒன்றாக விளங்கும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில், கடந்த 18ஆம் தேதி அன்று பங்குனி உத்திர திருக்கல்யாண நிகழ்ச்சி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் கடந்த 24ஆம் தேதி நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், பங்குனி உத்திர திருக்கல்யாணம்!

இதனை தொடர்ந்து, பங்குனி உத்திர திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடைபெற்றது. இதனையொட்டி, கோயில் ஆயிரம்கால் மண்டபத்தின் மேல் தளத்தில் அதிகாலை 4.30 மணி அளவில் ஏகாம்பரநாதர் – ஏலவார்குழலி அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து திருமண கோலத்தில் ஏகாம்பரநாதர், தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா சென்றனர்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், பங்குனி உத்திர திருக்கல்யாணம்!

இதனை கோயிலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர். முன்னதாக, கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு குறிப்பிட்ட அளவிலான பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர். அப்போது, போலீசாரை மீறி கோயிலுக்குள் செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்ததால், இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.