‘உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டால் மழை நீர் வடிந்து விடும்’ – ஆட்சியர் தகவல்!

 

‘உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டால் மழை நீர் வடிந்து விடும்’ – ஆட்சியர் தகவல்!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி கனமழை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ‘செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்ததால் நேற்று பிற்பகல் 12 மணிக்கு முதற்கட்டமாக 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்ததால் 9,000 கனஅடி நீர் வரை திறக்கப்பட்டது. அதன் பின்னர் நீர் வரத்து குறைந்ததால் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டு இன்று காலை 1,500 கனஅடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டது.

‘உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டால் மழை நீர் வடிந்து விடும்’ – ஆட்சியர் தகவல்!

நீர் வெளியேற்றத்தால் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு முன் கூட்டியே 12 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, 852 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டது. வரதராஜபுரம் பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் மழை நீர் சூழ்ந்ததால், உடனடியாக மோட்டார் இயந்திரங்கள் கொண்டு மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரி நீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டால், மழை நீர் வடிந்து விடும். கடந்த 2 நாட்களாக பெய்து வந்த கனமழையின் காரணமாகவே உபரி நீர் திறக்கப்பட்டது’ என்று தெரிவித்தார்.