வரும் 30 ஆம் தேதி முதல் கம்பன், மன்னை விரைவு ரயில் சேவை தொடக்கம்!

 

வரும் 30 ஆம் தேதி முதல் கம்பன், மன்னை விரைவு ரயில் சேவை தொடக்கம்!

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தை பொருத்தவரை மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் இயங்க தொடங்கியது. தொடர்ந்து குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. மேலும் முன்பதிவில்லாத பெட்டிகளுக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. சென்னையில் இருந்து கோவை, மதுரை, தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன.

வரும் 30 ஆம் தேதி முதல் கம்பன், மன்னை விரைவு ரயில் சேவை தொடக்கம்!

இதனிடையே நாட்டில் உள்ள அனைத்து ரயில்வே பாதைகளும் மின்மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி-காரைக்கால் இடையிலான ரயில்வே பாதைகளும் மின்மயமாக்கல் கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது. இதனையடுத்து நீடாமங்கலம்-மன்னார்குடி வரையிலான 11 கிலோ மீட்டர் தூர ரயில்வே பாதையை மின்மயமாக்கும் பணிகளும் முழுமையாக நிறைவடைந்தது.

இதனால் திருவாரூர் வழியாக காரைக்கால் வரை செல்லும் கம்பன் விரைவு ரயிலும் மன்னார்குடி வரை செல்லும் மன்னை விரைவு 30.11.2020 முதல் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த ரயில்களுக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.