கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் நாளை முக்கிய ஆலோசனை

 

கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் நாளை முக்கிய ஆலோசனை

சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் சென்னையில் நாளை முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் நாளை முக்கிய ஆலோசனை

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் மக்கள் நீதி மய்யமும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. கடந்த மாதம் 16ம் தேதி அக்கட்சி கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில், 40 மட்டுமே கலந்து கொண்டனர். அதன் முடிவில், ஒருமித்த கருத்துக்களுடைய கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கும் என்ற அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த வரும் நாளை மற்றும் நாளை மறுநாளும் தமிழகம் முழுவதிலும் உள்ள கட்சி நிர்வாகிகளை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்திக்கவிருக்கிறார். இந்த கூட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். இக்கூட்டத்தின் முடிவில், தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.