நெருக்கடியான காலக்கட்டத்தில் முதல்வராக பொறுப்பீர்கிறீர்கள்… கமல்ஹாசன்!

 

நெருக்கடியான காலக்கட்டத்தில் முதல்வராக பொறுப்பீர்கிறீர்கள்… கமல்ஹாசன்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுக 158 தொகுதிகளில் முன்னணியில் உள்ளநிலையில் அதிமுக, 76 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜகவுடனான கூட்டணியில் தேர்தலை சந்தித்த அதிமுக ஆட்சியை பறிக்கொடுத்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் பாமக 5 இடங்களில் வென்றுள்ளது. அதிமுகவுக்கு மட்டுமின்றி, கூட்டணிக்கும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

நெருக்கடியான காலக்கட்டத்தில் முதல்வராக பொறுப்பீர்கிறீர்கள்… கமல்ஹாசன்!

இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெருவெற்றி பெற்றுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துக்கள்” என பதிவிட்டார்

இதற்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ள முக ஸ்டாலின், “அன்பு நண்பரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி! பேரிடரிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய பெரும் பணியில் தங்களைப் போன்றவர்களின் ஆதரவும் ஆலோசனைகளும் புதிய அரசு மேற்கொள்ளும் மக்கள் நலப் பணிக்குத் துணையாகட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.