ஆசிரியர்களை இன்றும் என்றும் நினைவில் கொள்வோம், போற்றுவோம்: கமல்ஹாசன்

 

ஆசிரியர்களை இன்றும் என்றும் நினைவில் கொள்வோம், போற்றுவோம்: கமல்ஹாசன்

ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர் ராதாகிருஷ்ணன். ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதை தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டியதால்தான் அவரது பிறந்த நாளை ஆசிரியர் தினமான கொண்டாடி வருகிறோம்.
அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதியை ஆசிரியர் தினமாக, 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில், ஆசிரியர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில், பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என இந்தியா முழுவதும் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆசிரியர் தினத்தையொட்டி பல்வேறு தலைவர்களும் அவரவர் ஆசிரியர்களை நினைவில் கொண்டு புகழாரம் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாளைய தமிழகத்தின் நம்பிக்கையாம் நம் பிள்ளைகளுக்கு நற்கல்வி தந்து சான்றோர்களாக உருவாக்குவது நல் ஆசிரியர்கள்தான். அவர்களை இன்றும் என்றும் நினைவில் கொண்டு வாழ்த்துவோம். போற்றுவோம்” என வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.