மேல்முறையீடுக்கு இடமளிக்காமல் இட ஒதுக்கீட்டை இவ்வாண்டே செயல்படுத்த வேண்டும்- கமல்ஹாசன்

 

மேல்முறையீடுக்கு இடமளிக்காமல் இட ஒதுக்கீட்டை இவ்வாண்டே செயல்படுத்த வேண்டும்- கமல்ஹாசன்

தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீடு அமலில் இருந்துவரும் சூழலில் மருத்துவப் படிப்புக்கு மத்திய அரசு 27 சதவிகித இடஒதுக்கிடு எனச் சொல்வது சரியானது அல்ல என்று திமுக, மதிமுக, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட தமிழக கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. அதன் விசாரணை பல கட்டங்களில் நடைபெற்றது. அதன் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு விஷயத்தில் மத்திய அரசே சட்டரீதியாக உத்தரவை இட முடியும். அதனால், மத்திய அரசே இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் விஷயம் தொடர்பாக சட்டத்தை இயற்றி வெளியிட வேண்டும். இதை, அடுத்த மூன்று மாதங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், “தமிழக மக்களின் உரிமைகளைத் தாரை வார்த்துக் கொடுத்தே, தன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் தமிழக அரசு, OBC இட ஒதுக்கீட்டில் உயர்நீதி மன்ற உத்தரவை விரைந்து செயல்படுத்த அழுத்தம் தர வேண்டும்.சமூகநீதி காத்திட தாமதமோ,மேல்முறையீடோ இன்றி இட ஒதுக்கீட்டை இவ்வாண்டே செயல்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.