ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை… ஸ்டாலினுக்கு கமல் அட்வைஸ்

 

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை… ஸ்டாலினுக்கு கமல் அட்வைஸ்

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் 10 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால், அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஒருபுறம் ஏற்பட்டது. எனினும், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வந்த நிதியை வைத்து நிலைமையை அரசு ஈடு செய்தது. இதனிடையில், கள்ளச்சந்தையில் மதுபான விற்பனை மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது போன்ற சட்ட விரோத செயல்கள் தலை தூக்கியது. இதனால் ஜூன் 14 ஆம் தேதி முதல் கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை… ஸ்டாலினுக்கு கமல் அட்வைஸ்

இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “குடித்துப் பழகியவர்களுக்கும், விற்றுப் பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம். ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை எனும் அவச்சொல் எழாமல் புதிய முதல்வர் பார்த்துக்கொள்ளவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.