கங்கையில் கொரோனா பிணங்கள்- கமல்ஹாசன் வேதனை

 

கங்கையில் கொரோனா பிணங்கள்- கமல்ஹாசன் வேதனை

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலையால் ஏராளமானோர் தினசரி பாதிக்கப்பட்டுவருகின்றனர்.கொரோனா உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துவ

கங்கையில் கொரோனா பிணங்கள்- கமல்ஹாசன் வேதனை

ருகின்றனர். இந்த சூழலில் உத்தர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் கங்கை, யமுனை ஆறுகளில் சடலங்கள் செத்து மிதக்கின. ஆற்றில் மிதக்கும் சடலங்களை நாய்கள் கடித்துக்குதறும் காட்சிகள் காண்போரை கண்கலங்க வைப்பதுடன் துர்நாற்றமும் வீசிவருகின்றன. கங்கை நதியை சுத்தம் செய்வதற்காக நமாமி கங்கா திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. அதற்காக 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததாகவும் கணக்கு காண்பித்தது. ஆனால் இன்று பிணங்களால் கங்கை நதி மீண்டும் மாசடைந்துவருகிறது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “₹20,000 கோடி ஒதுக்கப்பட்ட ‘நமாமி கங்கா’வில் கொரோனாவில் இறந்தவர்களின் பிணங்கள் மிதக்கின்றன. மக்களையும் காக்கவில்லை. நதிகளையும் காக்கவில்லை. ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பங்கள் பரிதாபமாகக் கலைகின்றன ” எனக் குறிப்பிட்டுள்ளார்.